சென்னை வந்தடைந்தார்! தோனி காரணம் என்ன?

Photo of author

By Vijay

ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாக அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னைக்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2021 (IPL 2021) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்த ஆண்டு மெகா ஆக்சன் நடைபெறுவதால் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று தோனி சென்னை வந்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் கேப்டனாக மட்டுமில்லாமல் அணியில் எந்த வீரர்களை எடுக்க வேண்டும் போன்ற முக்கிய முடிவுகளையும் பல ஆண்டுகளாக தோனி எடுத்து வருகிறார். தற்போது வரை சிஎஸ்கே அணி ஜடேஜா, ருதுராஜ் கைக்வாட், மொயின் அலி மற்றும் தோனி ஆகிய நான்கு வீரர்களை தக்க வைத்துள்ளது. ஜடேஜா 16 கோடி ரூபாய்க்கும், தோனி 12 கோடி ரூபாய்க்கும், மொயின் அலி 8 கோடி ரூபாய்க்கும், ருதுராஜ் கைக்வாட் 6 கோடி ரூபாய்க்கும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு ஏலத்தில் 48 கோடி ரூபாய் மீதம் உள்ளது.