சேலம் எடப்பாடி அருகே கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் மூழ்கி பலி! எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!!

Photo of author

By Rupa

சேலம் எடப்பாடி அருகே கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் மூழ்கி பலி! எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!!

சேலம் மாவட்டம் எடப்பாடி கல்வடங்கம் பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் எடப்பாடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்களும், அதே போல் மேட்டூர் அரசு கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்களும் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நான்கு மாணவர்கள்  நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்திவுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி விடுத்துள்ளார், அதில் எடப்பாடி கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற பத்து மாணவர்களில் நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், நாட்டின் முதுகெலும்பாக உள்ள மாணவ செல்வங்கள் எந்த ஒரு செயலிலும் ஈடுபடும்போது எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டு கேட்டு கொள்வதாகவும், மாணவ செல்வங்களை இழந்து வாடும் அவர்களது உறவினர்கள், பெற்றோர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் மரணமடைந்தவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வதாக தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த இந்த சோக சம்பவத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் தன்னுடைய இரங்கல் செய்தியை தெரிவித்ததுடன், இறந்த நான்கு நபர்களுக்கு முதல்வர் நிவாரண தொகையிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்