ஜியோ மற்றும் ஏர்டல் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி ரீஜார்ச் தேவையில்லை!
கொரோனா தொற்று காலத்தில் பெருமளவு மக்கள் பாதித்து வருகின்றனர்.வேலைவாய்ப்பு இன்றியும் உணவின்றியும் மக்கள் தவித்து வருகின்றனர்.இந்த சூழலில் பல மக்கள் உதவி செய்தும் வருகின்றனர்.அந்தவகையில் ஜியோ மற்றும் ஏர்டல் நிறுவனமும் மக்களுக்கு உதவ முன் வந்துள்ளது.நெட்வர்க் நிறுவனத்தில் அதிக படியாக ஜியோ மற்றும் ஏர்டல் இடையே தான் அதிக போட்டி நிலவி வருகிறது.
இவர்கள் இருவரும் தற்போது மக்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.ஏர்டல் நிறுவனம் தற்போது குறைந்த வருமானம் கொண்ட தங்களின் 5.5 கோடி வாடிக்கையாளர்களுக்கு தனது 49ரூபாய் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இத்திட்டத்தின் மூலம் 39 டாக்டைம் மற்றும் 100mb டேட்டா 28 நாட்களுக்கும் பயன்படுத்துமாறு கூறியுள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் மக்கள் குறைந்த பணத்திலேயே அதிகப்படியான சலுகைகளை பெற முடியும்.இந்த சலுகை திட்டமானது இந்த வாரம் நடைமுறைக்கு வர உள்ளது.இந்த சலுகை அனைத்தும் பிரிப்பைட் உபயோகிப்பவர்களுக்கு மட்டும் என கூறியுள்ளனர்.அதேபோல ஜியோ நிறுவனத்தின் முகேஷ் அம்பானியும் மக்கள் நலன் கருதி புதிய சலுகைகளை வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில் ஜியோ நிறுவனம் கூறியது,கொரோனா தொற்று காலத்தில் ரீசாராஜ் செய்ய முடியா காலத்திலும் தினம் 10 நிமிடம் டாக்டைம் என ஓர் மாதத்திற்கு 300 நிமிடங்கள் ஆக இலவசமாக பேசிக்கொள்ளலாம் என கூறியுள்ளது.இந்த சலுகையானது தொற்று காலம் முடியும் வரை மட்டுமே எனவும் தெரிவித்துள்ளனர்.அதனோடு ரீஜார்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு ரீஜார்ச் திட்டம் இலவசம் என தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த இணை இலவச ரீஜார்ச் திட்டம் பிரிபைட் பயணிகளுக்கு மட்டும் என்றும் கூறியுள்ளனர்.