டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி:மேட்டூர் அணையின் நீர் திறப்பு அதிகரிப்பு

0
171

கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.29 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று இரவு நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.93 அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த சிலநாட்களாக பெய்துவரும் மழையால் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிகரித்ததால்,கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து 45,000 அடி முதல் 1.5 லட்சம் கனஅடியாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாகவும், அனணயின் நீர்மட்டம் 75.83 அடியாகவும் இருந்தன. இதனிடையே, நேற்று இரவு நீர்வரத்து விநாடிக்கு 1.29 லட்சம் கனஅடியாக அதிகரித்து வருகிறது.இதனால், அணையின் நீர்மட்டம் 16 அடி உயர்ந்து தற்போது 91.93 அடியாக அதிகரித்தது. தற்போது அணையின் நீர் இருப்பு 54.83 டிஎம்சி நீராத உள்ளது.

காவேரி டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணையிருந்து திறந்து விடப்பட்டுள்ளது.

Previous articleவிவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்:? செவிசாய்க்குமா மத்திய மாநில அரசு!
Next articleடோனி சிறந்த மனிதர்