தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய உத்தரவு!

0
185
Attention private and government aided schools! Tamilnadu government's new order!
Attention private and government aided schools! Tamilnadu government's new order!

தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய உத்தரவு!

சமீப காலமாக பள்ளி பேருந்துகளில் விபத்துக்கள் தொடர்ச்சியாக நடந்த வருகிறது. மாணவர்கள் பேருந்தின் பின்பக்கம் இருப்பதை அறியாமல் பேருந்தை சிலர் இயக்கி விடுகின்றனர். இதனால் மாணவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இது போல சமீபத்தில் அதிகப்படியான மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனையெல்லாம்  தடுக்க தமிழக அரசு உத்தரவு ஒன்றை அமல்படுத்தி உள்ளது. அந்த வகையில் இனி அனைத்து பள்ளி பேருந்துகளிலும்  கட்டாயம் கேமரா பொருத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேபோல சென்சார்  பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் அனைத்து பள்ளி பேருந்துகளிலும் இனி கேமரா மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி சென்சார் பொருத்தப்படும்.

இவ்வாறு பொருத்துவதால் மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யலாம்.அதுமட்டுமின்றி தேவையற்ற விபத்துக்களை தவிர்க்கலாம்.ஏதேனும் இரு வாகனங்களுக்கு இடையே விபத்து ஏற்படுமாயின் யார் மீது தவறு உள்ளது என்பதையும் இந்த கேமரா மூலம் கண்டுக்கொள்ளலாம்.தமிழக அரசின் இந்த உத்தரவு பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Previous articleஇந்த இடங்களுக்கு  நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!
Next article#Breaking: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரி உள்ளிட்ட 4 போலீஸார் சஸ்பென்ட்