திமுக பொதுகூட்டம்… திமுக நிர்வாகிகளின் பாலியல் தொல்லையால் கதறி அழுத பெண் காவலர்..நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்த திமுக சட்டமன்ற உறுப்பினர்..!

0
408

பெண்களுக்கு பாதுகாப்பு தருவோம் என ஆட்சிக்கு வந்த திமுகவின் பொதுகூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, விருகம்பாக்கம் பகுதியிலுள்ள தசரபுரம்பேருந்து நிறுத்ததில் பேராசிரியர் அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகள் வழங்கினர். இந்த கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.

திமுக பொதுகூட்டம்... திமுக நிர்வாகிகளின் பாலியல் தொல்லையால் கதறி அழுத பெண் காவலர்..நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்த திமுக சட்டமன்ற உறுப்பினர்..!

ஒரு கட்டத்தில் அந்த பெண் காவலருக்கு எல்லை மீறி தொல்லை தரவே அவர் கதறி அழுதுள்ளார். அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை பிடித்தனர். ஒருவர் பிடிப்பட்ட நிலையில் தப்பி சென்ற மற்றோருவரை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் சாலிகிராமத்தில் உள்ள பிரவீன், ஏகாம்பரம் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் என்பது தெரியவந்தது.இருவரையும் கைது செய்ய முயன்ற போது விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பாலியல் தொல்லை அளித்தவர்களை அழைத்து செல்ல விடாமல் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ராஜா திமுக நிர்வாகிகளில் செயலை கண்டுகொள்ளாமல் சென்று விடுமாறு கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்களுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலை என்ன என்பது கேள்வி குறியாக உள்ளது.

Previous articleகள்ளகாதலுக்கு இடையூறு.. கூகுளில் தேடி மனைவியை கொலை செய்த கணவன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!
Next articleஅமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here