திமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறிய ஆற்காடு வீராசாமியால் பரபரப்பு! வெளியேறியதற்கான காரணம் இதுதான்

0
239

திமுக முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்ட முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி கூட்டத்திலிருந்து திடீரென எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Arkadu Veerasamy abruptly leaves DMK general body meeting!  This is the reason
Arkadu Veerasamy abruptly leaves DMK general body meeting! This is the reason

மார்ச் மாதமே நடைபெற இருந்த திமுகவின் பொதுக்குழு கூட்டம் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் கடந்த 9ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

இந்த பொதுக்குழு கூட்டத்தின் வாயிலாக, திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்யப்பட்டதுடன், பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூன்னாள் பொருளாளருமான ஆற்காடு வீராசாமி அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்தார். சமீப காலமாக அவரது உடல்நிலை சரியில்லாததால் கட்சி நடவடிக்கைகளில் செயல்படாமல் இருந்து வந்தார்.

 

இருப்பினும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றதை அடுத்து அறிவாலயம் வந்திருந்த ஆற்காடு வீராசாமி, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார்.

அதற்குப்பிறகு ஒரு வருடம் கழித்து தற்போதுதான் அறிவாலயம் வந்திருக்கிறார். நடப்பதற்கே மிகுந்த சிரமத்துடன் வந்த அவர் அங்கு நடந்த அந்த விழாவில் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார்.

ஆனால் திடீரென விழா நடந்து கொண்டிருக்கும் போதே காலை 11 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி அரங்கில் இருந்து எழுந்துவிட்டார். இதனால் விழாவில் கலந்துகொண்டவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரிக்கையில், விழா நடந்த அரங்கம் முழுக்க குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டிருந்தது. அதனால் அவருக்கு மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதால் அரங்கில் இருந்து வெளியேறினார் என கூறப்படுகிறது.

கொரோனா தொற்று சமயத்தில் ஏசி பயன்படுத்துவது ஆபத்தானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது உடலுக்கும் ஏசி ஒத்துவரவில்லை.

 

இதனால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர முடியாமலும், மூச்சு விடுவதில் சிரமப்பப்பட்டதை அடுத்து வீட்டிற்கு செல்வதாக கூறி பொதுக் குழுவில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார் ஆற்காடு வீராசாமி.

Previous articleயுவராஜ் சிங்கின் முடிவால் உற்சாகத்தில் ரசிகர்கள்
Next articleகல்வி கற்க வசதி இல்லை என்பதால் கூலிக்கு வேலைக்கு செல்லும் குழந்தைகள்!