திருநங்கைகளிடம் காதல் ஆசை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது!

Photo of author

By Parthipan K

புழல் பகுதியை சேர்ந்தவர் உசேன் என்பவர். இவர் திருநங்கைகளிடம் காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை பறித்து உள்ளார்.எனவே இந்த உண்மை அறிந்த திருநங்கைகள் இவனிடம் ஏமாந்து விட்ட வருத்தம் தாங்காமல் அடுத்தடுத்து இரண்டு திருநங்கைகள் தற்கொலை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளன.

இந்த உசேனின் காதல் வலையில் சிக்கிய பெண்களில் இரண்டு பேர் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் ஒருவர் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த பிரியாங்கா என்பவர்.தூத்துக்குடியில் உள்ள வைகுண்டம் பகுதியைச் சேர்ந்த யுவஸ்ரீ என்பவர்.மேலும் தற்கொலை செய்து கொண்ட பிரியங்காவின் புகைபடமானது வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட பொழுது அது மற்ற திருநங்கைகளிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இவர் ஏற்கனவே யுவஸ்ரீ உடனும் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.இந்நிலையில் தற்கொலைக்கு முன் யுவஸ்ரீ என்ற திருநங்கை தன்னை உசேன் தன்னை அடித்து கொடுமை செய்ததாக மரண வாக்கு மூலம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சென்னை அமைந்தகரை போலீசார் உசேன் என்பவரை கைது செய்துள்ளனர்.திருநங்கைகளுக்கு நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.