துலாம் – இன்றைய ராசிபலன்!! உற்சாகத்துடன் செயல்படும் நாள்!!

0
212
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் – இன்றைய ராசிபலன்!! உற்சாகத்துடன் செயல்படும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்படும் நாள். கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அன்பு மழை பொழிவார்கள். நிதி நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

 

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும் என்பதால் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் செல்லும். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்து குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகளை கண்டிப்பாக நீங்கள் அடைவீர்கள். அரசியல்வாதிகள் கொடுத்து வைத்தவர்களாக காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காண்பீர்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleநள்ளிரவில் வெளியானது துணிவு.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்…!
Next articleவிருச்சகம் – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here