நாயின் பற்களை சுத்தம் செய்ய ரூ 5 லட்சம் செலவு செய்த நபர்! இணையத்தில் ஷாக் கொடுக்கும் வைரல் பதிவு!

Photo of author

By Rupa

நாயின் பற்களை சுத்தம் செய்ய ரூ 5 லட்சம் செலவு செய்த நபர்! இணையத்தில் ஷாக் கொடுக்கும் வைரல் பதிவு!

Rupa

The person who spent Rs 5 lakh to clean the dog's teeth! Shocking viral record on the Internet!

நாயின் பற்களை சுத்தம் செய்ய ரூ 5 லட்சம் செலவு செய்த நபர்! இணையத்தில் ஷாக் கொடுக்கும் வைரல் பதிவு!

பொதுவாக ஒரு சில மனிதர்கள் தாங்கள் வளர்க்கும்  செல்லப்பிராணிகள் மீது அதீத பிரியத்தை வைத்திருப்பர். அவ்வாறுதான் இங்கு ஒருவர் தான் வளர்த்து வரும் நாயின் மீது உள்ள அதீத பிரியத்தால்  ஐந்து லட்சம் வரை செலவு செய்துள்ளார். இவர் ஐந்து லட்சம் வரை செலவு செய்தது குறித்து ரெட்டிட் என்ற இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இவர் தான் வளர்த்து வரும் 12 வயது உடைய நாயின் பல்லை சுத்தம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நாய்க்கு முதலில் மயக்கம் மருந்து கொடுக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர்.மருத்துவர்கள்  ரத்த பரிசோதனை, இருதய பரிசோதனை என அனைத்தையும் மேற்கொண்டு உள்ளனர். அவ்வாறு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அந்த நாயின் பற்களை அகற்ற வேண்டும். மேலும் புற்றுநோய் வருவதை தடுக்க பயாப்ஸிக்கு அனுப்ப வேண்டும் என கூறினர்.

அதுமட்டுமின்றி இதெல்லாம் செய்வதற்கு முன் நாயின் வாயை ஸ்கேன் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதையெல்லாம் செய்து முடிக்க கிட்டத்தட்ட எங்களுக்கு  5 முதல் 5.5 லட்சம் வரை செலவு எட்டி விட்டது என கூறியுள்ளார். இவ்வாறு ஐந்து லட்சம் வரை செலவு செய்து நான் ஏமாற்றபட்டு  விட்டேன் என தனது மாமியார் கூறுவதாகவும் அவர் இணையத்தில் தெரிவித்துள்ளார், மேலும் அவரது பெற்றோர் மற்றும் மாமியார் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இவ்வளவு செலவு செய்வது விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். நாய்க்காக இவ்வளவு டாலர் பணத்தை வீணடித்ததாக அவரது பெற்றோர் மற்றும் மாமியார்  எண்ணுவதாக தெரிவித்தார். இவரின் இந்த பதிவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் இவருக்கு ஆதரவையே தெரிவித்து வருகின்றனர்.