நீங்கள் இந்த ராசிக்காரர்களா? இன்று உங்கள் எதிரிகள் உதிரியாகும் நாள்!

Photo of author

By Sakthi

மேஷம்

வருமானத்தைவிட செலவுகள் முன்பே நிற்கும். கொள்கைப் பிடிப்புடன்க் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள், வரவு திருப்தியாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும் மருத்துவ செலவும் குறைந்து மனநிம்மதியை வழங்கும் பழைய கடன்களை அடைத்து மகிழ்ச்சியடைவீர்கள்.

மிதுனம்

இன்று தாங்கள் ஏழை எளியோருக்கு உதவி செய்து உள்ளம் மகிழும் நாள். வாகன பராமரிப்பில் அக்கறை செலுத்துவீர்கள் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை.

கடகம்

இன்று தாங்கள் ஆர்வம் காட்டாத செயல்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள் பழைய பாக்கிகள் வசூலாகி பண வரவை அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று தங்கள் நன்றாக யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போகலாம். குறைவாக பேசினாலும் குறை பேசாமலிருப்பது மிகவும் நன்று. தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படும்.

கன்னி

இன்று தாங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும் புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகும் தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்வர்களால் உதவி கிடைக்கும்.

துலாம்

இன்று தாங்கள் பக்குவமாகப் பேசி பாராட்டுகளை பெரும் நாள். பயணத்தால் பலனுண்டு பாதியில் நின்றுபோன கட்டிட பணிகள் ஆரம்பமாகும். பகையான நட்பு மீண்டும் உறவாகும் உறவினர்கள்உதவி செய்ய முன்வருவார்கள்.

விருச்சகம்

இன்று தங்களுக்கு துணிவும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் காரணமாக, லாபம் கிடைக்கும் முக்கிய புள்ளிகளைச் சந்தித்து தொழில் வளர்ச்சிக்கான முடிவை மேற்கொள்வீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு ஆதாயம் கிட்ட அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். பண பரிமாற்றத்தில் இருந்த ஒழுங்குமுறைகள் மாறும் உடல்நலனில் கவனம் தேவை, உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.

மகரம்

இன்று தங்களுடைய மனக்குறை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவுக்கு வரும். உத்யோகத்தில் உங்களுடைய செயல்பாடுகளை பார்த்து ஆச்சரியப்படுவார்கள் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்

கும்பம்

இன்று தங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். இளைய சகோதரத்தின் வழியில் இணக்கமான சூழ்நிலை உண்டாகும் பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும், வந்து சேரலாம்.

மீனம்

இன்று தங்களுடைய எதிரிகள் பலமிழக்கும் நாள். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர் வாழ்க்கை துணை வழியே மகிழ்ச்சி கொடுக்கும் செய்தி ஒன்று வந்து சேரலாம் வருமானம் திருப்தியாக இருக்கும்