பணத்தை கட்டி விட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல கூறிய மருத்துவமனை! அதன் பின் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

0
288
#image_title

பணத்தை கட்டி விட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல கூறிய மருத்துவமனை! அதன் பின் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் இறந்த நபரின் உடலை எடுத்துச் செல்ல பணத்தை கட்டுமாறு மருத்துவ நிர்வாகம் கூறிய நிலையில் அங்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பகதூர் சிங். இவருக்கு இருமல் தொற்று ஏற்பட்டதால் சுவாசிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு உள்ளார். அதனால், பகதூர் சிங்கை  அவரது உறவினர்கள் ஹோசியார்பூரில் உள்ள ஐ.வி.ஒய். என்ற பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ)  சேர்க்குமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மூன்று, நான்கு மணிநேர மருத்துவர்களின் தீவிர சிகிச்சைகளுக்கு பின் பகதூர் சிங் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் உரிய பணத்தை கட்டி விட்டு உடலை எடுத்துச் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறந்த சிங்கின் உடல் அருகே உறவினர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது திடீரென சிங்கின் கால்விரலில் அசைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உடனடியாக  அவரது குடும்பத்தினர் சிங்கை தூக்கி கொண்டு பி.ஜி.ஐ. மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் சில மணி நேரங்களில் பகதூர் சிங்குக்கு சுயநினைவு திரும்பியுள்ளது.

இதனை தொடர்ந்து பகதூர் சிங்கின் உறவினர்கள் அவர் இறந்து விட்டதாக கூறிய தனியார் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோசமிட்டனர். இந்தப் போராட்டத்தில் உயிர்பிழித்த பகதூர் சிங்கும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமருத்துவ ஊழியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அன்று உங்களுக்கு விடுமுறை தான்!
Next articleயுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேர்விற்கும் டிகிரி இருந்தால் உடனே விண்ணபிக்கலாம்!