பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வந்தே பாரத் உள்பட ரயில்களில் கட்டணம் குறைப்பு !!
வந்தே பாரத் உள்பட பல ரயில்களின் கட்டணம் 25% வரை குறைக்கப் படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களில் ஏ.சி பெட்டிகளில் கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது இந்தியாவின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப் படுத்தப்பட்டு இயங்கி கொண்டு உள்ளது. விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு வசதியாக இருப்பதால் பெரும்பாலான மக்களின் விருப்பபயண பட்டியலில் வந்தே பாரத் ரயில் பயணம் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு சிறப்புகளை பெற்ற வந்தே பாரத் பிரதமர் மோடியால் துவக்கப்பட்ட திட்டமாகும். இந்த ரயில்கள் சென்னையில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருகின்றன. இதுவரை 75 ரயில்கள் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. வரும் காலத்தில் இன்னும் ஏராளமான ரயில்கள் தயாரிக்கப்பட்டு இயக்கப் பட இருக்கின்றன.
பல சிறப்புகளை பெற்றாலும் இன்னும் வந்தே பாரத் ரயில்கள் மீது சில குறைகளும் சொல்லப்பட்டு வருகின்றன. இதில் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இதில் பயணிக்க ஏதுவான சூழ்நிலை இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் இதில் கட்டணத்தினை குறைத்தால் ஏராளமான மக்கள் பயன்பெறுவர் என கோரிக்கைகள் எழுந்தது.
இந்த நிலையில் வந்தே பாரத் உள்பட சில ரயில்களில் கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தற்போது அறிவித்துள்ளது. இதனால் ஏசி,சேர்கார், மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் 25% வரை குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ரயில்களில் 50% க்கும் குறைவான மக்கள் பயணித்தால் அந்த ரயில்களிலும் கட்டண சலுகை வழங்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.