பரபரவென நடக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் பணிகள்… நடிகை சிந்து இத்னானி வெளியிட்ட புகைப்படம்!

0
369

பரபரவென நடக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் பணிகள்… நடிகை சிந்து இத்னானி வெளியிட்ட புகைப்படம்!

சிம்பு மற்றும் சிந்து இத்னானி நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மாநாடு படத்தின் வெற்றியால் சிம்புவின் மார்க்கெட் பல மடங்கு அதிகமாகி சிம்புவின் திரை வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது. மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் அடுத்த ரிலீஸாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.செப்டம்பர் 15 ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில் சமீபத்தில் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் சிம்பு. இது சம்மந்தமாக அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதையடுத்து இப்போது கதாநாயகி சிந்து இத்னானியும் தன்னுடையக் காட்சிகளுக்கான டப்பிங் பேசி முடித்துள்ளார். இது சம்மந்தமாக இயக்குனர் கௌதம் மேனனுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வைரலாகியுள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் அமெரிக்காவில் இருப்பதால் அவர் இந்தியா வந்ததும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என சொல்லப்படுகிறது.

Previous articleகார்த்தி – ராஜுமுருகன் இணையும் புதிய படம்… தொடங்குவதற்கு முன்பே கொக்கி போட்டு தூக்கிய நெட்பிளிக்ஸ்!
Next articleஇளைஞர்களுக்கு  அதிகரிக்கும் போதை மேல் உள்ள மோகம்! தேனியில் வரவேற்கப்படும் விழிப்புணர்வு!