பாகிஸ்தான் போலீசுக்கு அளிக்கப்படும் புதிய முறை பயிற்சி – எதற்கு தெரியுமா?

Photo of author

By Parthipan K

பாகிஸ்தான் போலீசுக்கு அளிக்கப்படும் புதிய முறை பயிற்சி – எதற்கு தெரியுமா?

Parthipan K

தவறுகளைத் தட்டிக் கேட்பதற்கும், அதைத் தடுப்பதற்கும், தன்னலம் பாராமல் உழைப்பவர்கள் காவல் துறை அதிகாரிகள். இவ்வாறாக பாகிஸ்தானில் உள்ள காவலர்கள் தவறு செய்பவர்களை பிடிப்பதற்கு ஒரு புது வழியை கண்டுபிடித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஒரு குறிப்பிட்ட இடமான ‘கராச்சி’ என்றழைக்கப்படும் காவல்துறையினருக்கான பயிற்சி மையத்தில் புதிய முறை பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் வழிப்பறிக்  கொள்ளைகள் அங்கு அதிக அளவில் நடைபெற்று வருகிறது, இதனால் அங்குள்ள மக்கள் அமைதியை இழந்து தவிக்கிறார்கள். சாதாரணமாக சாலையில் செல்ல இயலவில்லை. எப்போதும் ஒருவித பதட்டத்துடனே அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழிப்பறி திருடர்களை பிடிப்பதற்காக “ரோலர் ஸ்கேட்டிங்” மூலமாக,  திருடர்களை பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கேட்டிங் மூலம் விரைவாக செல்வதும், ஓடுவதும் மற்றும் மேடு பள்ளங்கள் உள்ள இடங்களில் எவ்வாறு செல்வது என்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர்கள் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது குறிபார்த்து துப்பாக்கியில் சுடுவதற்கும், தேவைப்படும் இடங்களில் குதிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி கடந்த 30 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் 10 பெண் காவலர்கள் என மொத்தமாக இருபது பேர் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.