பாதுகாக்கப்பட்ட வேளாண் நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிப்புக்கு அரசு ஆதரவா?

Photo of author

By Parthipan K

பாதுகாக்கப்பட்ட வேளாண் விளை நிலங்களாக அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

இதனை வேளாண் மண்டலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் குழாய் பதிப்பது, அரசின் அறிவிப்பிற்கு மதிப்பளிக்காமல் செயல்படுவதா? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 



இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டிடிவி தினகரன்,

“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களை கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருவது கண்டனத்திற்குரியதாகும்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் தோன்றியுள்ள 20 கிணறுகளில் இருந்து எரிவாய் களை எடுத்துச் செல்ல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் போடப் பட்டிருந்தது.


கெயில் நிறுவனம் மேற்கொண்ட அந்த பணியினை எதிர்த்து, விவசாயிகள், பொதுமக்கள், சூழலியல் போராளிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீனவர்கள் என பலர் இந்த போராட்டத்தினை நடத்தியதால் அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


தற்போது கொரோனா முடக்கத்தை பயன்படுத்தி, சீர்காழி அருகேயுள்ள திருநகரில் இருந்து பழைய பாளையம் வரை புதிய கிளியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் செய்தி மக்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பகுதிகளை உள்ளடக்கி தான் சிறிது நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் பழனிசாமி இந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவித்து இருந்தார். தற்போது அந்த இடத்தில் 5 அடி ஆழத்தில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது முதலமைச்சரின் அரைகுறை அறிவிப்புகளை சுட்டிக்காட்டுகிறது. பாதுகாக்கப்பட்ட விளைநிலமாக அறிவிக்கப்பட்ட பின் இன்னும் அங்கேயே விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை?

முதலமைச்சர் பழனிச்சாமிக்கு உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் தற்போது நடக்கும் இந்த பணியினை அகற்றி இருக்கவேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிப்பதும், ஆறுகளில் தொடர்ந்து மணல் கொள்ளை அடிப்பதையும் தடுப்பதற்கான விதிமுறைகளை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.