பால்பவுடரில் பர்ஃபியா? நாவூற வைக்கும் சுவையான ரெசிபி உங்களுக்காக…!

0
174

குழந்தைகளுக்கான பால்பவுடர் அனைவருக்கும் பிடிக்கும். அப்படி அனைவருக்கும் பிடித்த பால் பவுடரிக் சுவையான பர்ஃபி செய்து கொடுக்கலாம் வாங்க.

தேவையானவை :

பால் பவுடர் – 2 கப்

பால் அரை கப்

பொடி செய்யப்பட்ட சர்க்கரை – அரை கப்

நெய் – தேவையான அளவு

விருப்பமான நட்ஸ் – (பொடித்தது )விருப்பத்திற்கேற்ப

குங்குமப்பூ – 4 சிட்டிகை

செய்முறை :

அடுப்பில் ஒரு நான்டிஸ்க் தவாவை வைத்து அதில், நெய் ஊற்றவும். அது உருகியதும் பாலை ஊற்றவும்.கொதித்து வரும் போது அதில் கொஞ்சம் கொஞ்சமாக பால் பவுடரையும் சேர்த்து கட்டி வராமல் கிளறி கொள்ள வேண்டும்.

இடையில் தேவையான அளவு நெய் சேர்த்து கொள்ளவும்.நெய் பிரிந்து வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் சிறிது கலவையை உருட்டி பார்த்தால் பந்து போல வர வேண்டும் அந்த பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி விடுங்கள்.அதன்மேல் குங்குமப்பூ, பொடித்த நட்ஸ் தூவி அதனை ஸ்பூன் வைத்து அழுத்தி விடுங்கள் 30 நிமிடங்கள் கழித்து அதனை துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.

Previous articleபோதைக்கு அடிமையான இளைஞர்.. குடும்பத்தையே கொலை செய்த கொடூரம்..!
Next articleநீங்கள் இந்த பிளட் குரூப் உடையவரா? கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது!