புதுச்சேரியில் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி… 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதாக தகவல்!!

Photo of author

By Sakthi

புதுச்சேரியில் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி… 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதாக தகவல்!!

Sakthi

 

புதுச்சேரியில் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி… 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதாக தகவல்…

 

புதுச்சேரியில் ஓடும் ரயிலில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

 

புதுச்சேரி மாநிலத்தில் திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பாக ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

இந்த ஓவியப் போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. 5ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு பிரிவும், 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டனர். புதுச்சேரியில் ஓடும் ரயிலில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

ஓடும் ரயிலில் நடைபெற்ற இந்த ஓவியப் போட்டியில் தூய்மை இந்தியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல தலைப்புகளின் கீழ் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற 55 மாணவர்களுக்கு புஸ்சி வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

 

ஓடும் ரயிலில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் உப்பளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிபால் கென்னடி அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.