பெண்களுக்கு அரசு வழங்கும் 700000 வரையான கடனுதவி! உடனே அப்ளை செய்யுங்கள்!
பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.அந்தவகையில் அவர்களுக்கு மேலும் அதிகப்படியான நலத்திட்ட உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகிறது.தற்போது தமிழ்நாட்டில் கூட குடும்ப தலைவி உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு மட்டும் மாதம் தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் 30% மானியத்துடன் ரூ.7,50000 வரை கடனுதவி தாட்கோ அரசு நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த கடனுதவியானது பெண்கள் தொழில் முனைவோர் மற்றும் புதிதாக இடம் வாங்க நினைப்பவர்கள்,சிறு மற்றும் குறு தொழில் தொடங்க நினைப்பவர்கள் மற்றும் வண்டி வாங்கி தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறார்கள்.இந்த திட்டத்தை ஆண்ட்ரைடு மொபைல் வைத்திருப்பவர்கள் அவர்கள் போனிலேயே அப்ளை செய்யலாம்.எவ்வாறு செய்வது என்பதை கீழ்க்கண்டவற்றில் காணலாம்:
http:/application.tahdco.com/ என்ற இணையத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.அந்த பக்கத்திற்கு சென்றதும் click here என்றுள்ள பொத்தானை அழுத்த வேண்டும்.அதை செய்ததும் to apply என்ற பொத்தானை க்ளிக் செய்ய வேண்டும்.அதை செய்ததும் அடுத்ததாக உங்கள் caste,sub caste,ஆண் அல்ல பெண்,எந்த மாவட்டம் போன்றவற்றை கேட்கும்.நீங்கள் அதற்கு தகுந்த பதில்களை தேர்வு செய்ய வேண்டும். இதை அனைத்தையும் கொடுத்த பிறகு go to application என்றதை கொடுக்க வேண்டும்.அவ்வாறு கொடுத்த பிறகு உங்களின் வருமான சான்றிதழ்,சாதி சான்றிதழ்,தொழில் தொடங்குவதற்கான திட்டம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
இதனையடுத்து தொழில் தொடங்குபவரின் பெயர்,தந்தை பெயர்,வீட்டு முகவரி,பின்கோடு போன்றவற்றை சரியாக கொடுக்க வேண்டும்.வாக்காளர் அட்டை உள்ளவர்கள் வாக்காளர் எண் கொடுக்கலாம் ஆனால் இது கட்டாயம் இல்லை.புதிதாக தொழில் முனைவோர் கல்வி தகுதி சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.மேலும் இந்த திட்டத்தை முன்பே பயன்படுத்தி கடன் வாங்கியிருந்தால் அதையும் குறிப்பிட வேண்டும்.நீங்கள் ஏதேனும் மகளிர் சுயக்குழுக்களில் இருந்தால் அதனையும் குறிப்பிட வேண்டும்.
அதனையடுத்து தொழில் தொடங்குவதற்கு தேவையான தொகையை மதிப்பிட்டு குறப்பிட வேண்டும்.வேறேதும் வங்கிகளில் கடனுதவி பெற்றிருந்தால் அதனையும் குறிப்பிட வேண்டும்.தற்போது சுயமாக தொழில் தொடங்க உங்களுக்கு ரூ.100000 தேவைப்படுமாயின் அதில் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.அத்தோடு நீங்கள் எந்த வங்கியில் கடன் பெற விரும்புகிறீர்களோ அவ்வங்கியின் மொத்த விவரங்களையும் தர வேண்டும்.அத்தோடு உங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் அப்லோட் செய்ய வேண்டும்.நீங்கள் கொடுத்த விவரம் அனைத்தும் சரி என்ற சப்மிட் என்ற பொத்தானை க்ளிக் செய்ய வேண்டும்.அதன்பின் விண்ணப்பதாரர்களுக்கு ரிஜிஸ்டர் எண் கொடுப்பார்கள்.