பெண்களுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம்!! வெளிவந்த நியூ அப்டேட்!!
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியில், அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் அமைந்த திட்டம் தான், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்.
இந்த திட்டத்தினை சொன்னபடி நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறிவந்த நிலையில், கடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற ஈடைதேர்த்ல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் என கூறிய நிலையில், தற்போது பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி அன்னயோஜன மற்றும் கணவரின் ஆண்டு வருமானத்தை கணக்கில் கொண்டு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்கள், மாதம் 15,000 த்திற்கு மேல் வருமானம் பெறும் நபர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்காது என்றும், மேலும் தற்போது தமிழகத்தில் 1.14 கோடி ரேஷன் கார்டுகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும், இறுதிபட்டியல் தயார் செய்யப்பட்டு, முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று, இறுதிசெய்யப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.