பெண்களே ஜாக்கிரதை!! இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என அர்த்தம்!!

0
121
#image_title

பெண்களே ஜாக்கிரதை!! இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என அர்த்தம்!!

சில வருடங்களுக்கு முன்னர் ஆண்களுக்கு மட்டும் தான் மாரடைப்பு, இதயநோய் ஏற்பட்டு வந்தது. ஆனால் சமீப காலங்களில் நடந்த ஆய்வுகளில் பெண்களுக்கு அதிக அளவு மாரடைப்பு ஏற்படுகின்றது என்று தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் பெண்கள் தங்களது உடல் நிலையை சரியாக பார்த்துக் கொள்ளாமல் இருப்பதுதான்.

 

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர் சில அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் முன்னெச்செரிக்கையுடன் இருக்க வேண்டும்.

 

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சில அறிகுறிகள்…

 

* நெஞ்சு அடைத்தல்:

 

வாயுப் பிடிப்பு இருந்தாலும் திடீரென்று நெஞ்சு அடைப்பது போல இருக்கும். இதையும் மாரடைப்பையும் சிலர் குழப்பிக் கொள்வதுண்டு. இந்த நெஞ்சடைப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறலும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

 

சோர்வு:

 

உடல் சோர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதிக வேலை, போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது, மன அழுத்தம் போன்று பல காரணங்களை கூறலாம். இதயத்தில் இரத்தமானது சரியாக பம்ப் செய்ய முடியாமல் போகும் போது சோர்வு ஏற்படுகின்றது. எனவே பெண்களுக்கு ஏற்படும் அதிக சோர்வும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கும்.

 

தசை வலி:

 

பெண்களுக்கு ஏற்படும் தசை வலிகள் கூட மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். தோள் பிடிப்பு, தசை வலி போன்றவை இருந்தால் அஜாக்கிரதையுடன் விட்டுவிடக் கூடாது. இதுவும் இதய நோயின் அறிகுறியாக இருக்கும்.

 

தூக்கமின்மை:

 

பெண்களுக்கு தூக்கம் வராமல் இருப்பதும் இதயநோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகும். ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் பொழுது இந்த தூக்கமின்மை பிரச்சனை உண்டாகும். மன அழுத்தம், இதய பாதிப்புகள் பேன்றவை இருக்கும் பொழுது தூக்கமின்மை ஏற்படும். பெண்கள் அதிக நாட்கள் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டால் இது இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கும்.

 

வியர்வை:

 

கை, கால்களில் திடீரென்று வியர்வை ஏற்படும். உடல் முழுவதும் வியர்வை கொட்டும். தலைச்சுற்றல் ஆரம்பிக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

 

இடது பக்க வலி

 

இடது பக்கத்தில் இருக்கும் தோள் பட்டையில் இருந்து கால் வரையில் வலி ஏற்படும். இடது பக்கம் மழுவதும் வலி ஏற்படும். இதுவும் பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்புக்கான அறிகுறியாகும். மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இடது பக்கம், பின்பக்கம், நடு முதுகில் வலி மெல்ல மெல்ல வரும்.

 

படபடப்பு:

 

பெண்களுக்கு திடீரென்று படபடப்பு ஏற்படும். கை கால்ஙளில் நடுக்கம், பதட்டம் ஏற்படும். இதுவும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும். சாதாரணமாக இருக்கும் பொழுது திடீரென்று படபடப்பு வந்து இதயத்துடிப்பும் அதிகமாக இருந்தால் இது இதய நோய்கான அறிகுறியாக இருக்கலாம்.

 

அசிடிட்டி:

 

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் நாள் முழுவதும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டவாறு இருக்கும். அடிவயிற்றிலிருந்து நெஞ்சு வரை எரிச்சல் ஏற்படும். இவ்வாறு இருந்தால் நீங்கள் உடனே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவரை அணுக வேண்டும். இதுவும் மாரடைப்பு நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.