மணமக்களுக்கு மண் அடுப்பு, வறட்டி பரிசளித்த நண்பர்கள்.. கடலூரில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

Photo of author

By Janani

மணமக்களுக்கு மண் அடுப்பு, வறட்டி பரிசளித்த நண்பர்கள்.. கடலூரில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

Janani

கியாஸ் விலை உயர்ந்த நிலையில் மணமக்களுக்கு திருமணப்பரிசாக மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகு ஆகியவற்றை அன்பளிப்பாக அளித்தனர்.

திருமணத்திற்கு வரும் நண்பர்கள் தங்களால் முடிந்த அன்பளிப்பை அளித்து செல்வர். அதிலும் சிலர் வித்யாசமான பரிசை அளித்து மணமக்களை மட்டுமல்ல வந்திருப்பவர்களின் கவனத்தையும் ஈர்ப்பர். அப்படி ஒரு சம்பவம் கடலூரில் நடந்தேறியுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த நயீம் என்பவருக்கும் சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த முஸ்கான் என்பவருக்கும் நேற்று திருமண வரவேற்பு அங்குள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடந்தேறியது.

இதில், உறவினர்கள் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது நயீமின் நண்பர்கள் மணமக்களுக்கு அளித்த பரிசுகள் அனைவரின் கவனத்தையும் ஈரத்தது. கியாஸ் சிலிண்டரின் விலை ஏற்றத்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் அதனை சுட்டிகாட்டும் வகையில் அவர்கள் மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகு ஆகியவற்றை பரிசாக அளித்தனர்.

அவர்கள் அளித்த பரிசை மேடையில் திறந்து பார்த்த மணமக்கள் வியப்படைந்தனர். கியாஸ் விலை உயர்வை குறிக்கும் வகையில் அவர்கள் அளித்த பரிசு அனைவரின் கவனத்தையும் ஈரத்தது.