மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்வதற்கு 11 பேர் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவுட்டுள்ளது!.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு ஆலையம் செயல்பட்டுள்ளது. அவற்றின் தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறது.மேலும் 2016 அக்டோபர் 20 ல் சிவகாசியில் பட்டாசு கடையிலிருந்து லாரியில் பட்டாசு பெட்டிகளை ஏற்றிய போது சிறு மோதல் ஏற்பட்டு அதனால் வெடி விபத்து நிகழ்ந்தது.
இதனால் அருகிலுள்ள ஸ்கேன் சென்டரில் தீ பரவியது. பின்னர் அங்கு வேலை செய்துகொண்டிருந்த ஒன்பது பேர் தீயினால் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் தீ காற்றில் கடைகளுக்கு பரவியதால் 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து நாளிதழ்களில் வந்த செய்திஅடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாகவே வழக்கை எடுத்து விசாரித்து வந்தார்கள்.
இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும் அவர்களுக்கு பாதுகாப்பு விதிகளில் எதனை கடுமையாக்கலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.இதனை கண்காணிக்க தொடர்ந்து மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம் 11 பேர் கொண்ட குழுவை நியமித்தது. இக்குழுவில் நாக்பூர் எரிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி குமார், நாக்பூர் நேஷனல் பயர் சர்வீஸ் கல்லுாரி இயக்குனர் சவுத்ரி, தொழில்நுட்ப ஆலோசகர் நாராயணன், பொறியாளர் உமேத் சிங், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் தியாசங்கர் பாண்டே, தமிழ்நாடு பட்டாசு,கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்கணேசன், பட்டாசு வியாபாரிகள் சங்க பிரதிநிதி மணிக்ரோ, தனியார் நிறுவன செயல்அலுவலர் ஷா, பயர் அசோசியேஷன் அஜித் ராகவன், மும்பை தேசிய பாதுகாப்புகவுன்சில் லலித்கோப் ஹனா, தமிழக அரசுவருவாய் துறை செயலாளர் ஆகியோர் உள்ளார்கள்.
மேலும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பட்டாசு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பட்டாசு தொழிலை மேம்படுத்துவது குறித்து அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.இதனால் தொழில்நுட்பத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கலாம் என மத்திய அரசு கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.