மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள்? சுகாதாரத்துறை அமைச்சரின் பதில்!!

Photo of author

By CineDesk

மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள்? சுகாதாரத்துறை அமைச்சரின் பதில்!!

CineDesk

Updated on:

Vacancies in medical field? Health Minister's Answer!!

மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள்? சுகாதாரத்துறை அமைச்சரின் பதில்!!

மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு (MRB) தேர்வு வாரியம் மூலமாக தமிழகத்தில் சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக மருத்துவத்துத்துறையில் காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்து விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.

இந்த தேர்வு சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் வெளியிடப்பட வேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள் அரசிற்கு வலியுறுத்தி வருகின்றனர். இந்த காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தகவல் வெளி வந்தது.

இதனிடையே பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியம் அவர்கள் மருத்துவத்துறையில் தேர்வு எழுத பட்டவர்களின் எண்ணிக்கை 1,021 என்றும், இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெகு விரைவில் வெளியிடப்படும் என்றும் மேலும் மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது முற்றிலும் உண்மை அல்ல இது ஒரு வதந்தி செய்தி என்பதை அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.