மாணவர்களே அலர்ட்! இன்று தொடங்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்தது அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தபட்டது. மேலும் பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் எப்போது தொடங்கும் என மாணவ மற்றும் மாணவிகள் என அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் பத்தாம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி வரும் மார்ச் மாதம் 21 ஆம் தேதி முடிவடையும்.
மேலும் 12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி முடிவடையும் என அறிவித்தது. அதனை தொடர்ந்து இவர்களுக்கான செய்முறை தேர்வுகளும் நடத்தபட்டது. இன்று சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு தொடங்கி உள்ளது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மொத்தம் 21,86,940 பேர் தேர்வெழுதவுள்ளனர். இதில் 12,47,364 பேரும் மாணவர்களும், மாணவிகள் 9,39,566 பேரும், இதர பிரிவினர் 10 பேரும் தேர்வெழுத உள்ளனர். மேலும் நாடு முழுவதும் 7,240 மையங்களில் இந்த பொது தேர்வு நடைபெறுகின்றது. 12 ஆம் வகுப்பில் மொத்தம் 16,96,770 பேர் தேர்வெழுதவுள்ளனர். இதில் மாணவர்கள் 9,51,332 பேரும் மாணவிகள் 7,45,433 பேரும் உள்ளனர். இவர்களுக்கு நாடு முழுவதும மொத்தம் 6,759 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.