மாமியாரை தீவைத்து எரித்த மருமகள்!! பெட்ரோல்  சப்ளை செய்த கள்ளக்காதலன் விழுப்புரத்தை விழி பிதுங்க  வைத்த கொடூர சம்பவம்!!

Photo of author

By Sakthi

Villupuram:கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மருமகள். இச் சம்பவம்  விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த என்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்,  இவரது மனைவி ராணி.  இவர்களுக்கு  கருணா மூர்த்தி மற்றும் தட்சிணாமூர்த்தி என இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில்  தட்சிணாமூர்த்தி கடலூர் அரசு கல்லூரியில்  படித்து இருக்கிறார். மேலும்  அதே கல்லூரியில் படித்த பாலூர் பகுதியை சேர்ந்த சுவேதா என்ற பெண்ணை காதலித்து இருக்கிறார். பின்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடத்து முடிந்துள்ளது.

திருமணம் நடத்த கையேடு கருணா மூர்த்தி செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கி அங்கு உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்ற சென்று இருக்கிறார். இவரது அப்பா பாண்டியன் சென்னையில் தங்கி  வேலை செய்து வருகிறார். மேலும் என்.ஆர்.பாளையம் வீட்டில் மாமியார்  ராணி மற்றும் மருமகள் சுவேதா இருவரும் தங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று மாமியார்  ராணி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்  வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள்.

அப்போது உடல் தீப்பிடித்து எரிகின்ற நிலையில்  மாமியார்  ராணி, சுவேதா காப்பாற்ற முயன்று கொண்டு இருக்கிறார். இதை கண்டு மாமியார்  ராணி காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்  ராணி. தனது அம்மா இறப்பில் சந்தேகம் இருப்பதாக கருணா மூர்த்தி தம்பி தட்சிணாமூர்த்தி  காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.

இந்த நிலையில் போலீசார் மருமகள் சுவேதாவிடம் நடத்திய விசாரணை திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் சுவேதா தான் எதிர் வீட்டில் வசித்து வரும் சதிஷ் குமாருடன் தனக்கு 2மாதங்களாக தொடர்பு இருப்பதாகவும், நாங்கள் இருவரும் மாமியார் ராணி வேலைக்கு சென்ற பிறகு உல்லாசமாக இருந்து வந்தோம். இதை ஒரு நாள் மாமியார் ராணி பார்த்து கடுமையாக கண்டித்து இருக்கிறார்.

மேலும் தன் கணவர் கருணா மூர்த்தியிடம் இது பற்றி தெரிவிப்பதாக கூறினார் இதனால்  தன் காதலன் சதிஷ்யிடம் பெட்ரோல் வாங்கி வரச்சொல்லி இரவு 10 மணிக்கு மாமியார் ராணியின் உடல் முழுவதும் சதீஷ் பெட்ரோல் உற்ற நான் தீ வைத்தாக  கூறியிருக்கிறார். இச் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.