மின்னல் தாக்கி 3 பேர் பலி! கோவிலுக்கு சென்ற இடத்தில் சோகம்!

Photo of author

By Mithra

சாத்தூர் அருகே கோவிலுக்கு சென்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளி கிராத்தை சேர்ந்த 6 பேர், வனப்பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் பலத்த பழை பெய்தது.

இதனால், 6 பேரும் கோவில் வாசலில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மின்னல் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டனர். இதில், சோலைராஜ் என்பவரின் மனைவி சண்முகசுந்தரவள்ளி (52), கருப்பசாமி என்பவரது மனைவி தங்க மாரியம்மன் (45), சோலையப்பன் என்பவரின் மகன் கருப்பசாமி (16) ஆகியோர் மின்னல் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

2 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரித்து வருகின்றனர். சாமி கும்பிட சென்ற இடத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.