மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு!! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!! 

0
282
Aadhaar link with electricity connection!! New update released by the government!!
Aadhaar link with electricity connection!! New update released by the government!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு!! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!!

தமிழக அரசானது விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் மற்றும் வீடுகள் தோறும் மானிய மின்சாரம் வழங்கி வரும் நிலையில் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் அதனை ஒழுங்குமுறை படுத்த முன்னிலைத்துடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதை கொண்டு வந்தது.

இது குறித்து முக்கிய தகவல்களை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டவுடன் குறிப்பிட்ட கால அவகாசத்தையும் வழங்கி இருந்தார். மேலும் இணையதளம் ஒன்றை வெளியிட்டு அதில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

மேலும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ம் தேதி இந்த கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் 50 சதவீத மக்கள் மட்டுமே இணைத்திருந்த நிலையில் தற்போது ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழக அரசு அடுத்த புதுச்சேரியிலும் இதுபோலவே மின் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளனர்.

ஆதார் எண் அல்லது வேறு ஏதேனும் அரசு துறைகள் சம்பந்தப்பட்ட ஆவணத்தைக் கூட இணைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். நான் அடைவில் மின் இணைப்புகளில் சில மாறுபாடுகளை கொண்டு வருவதால் அதனை செயல்படுத்த இந்த மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Previous articleஅண்ணாமலை திட்டத்திற்கு செக் வைத்த பாஜக தேசிய தலைமை!! திக்குமுக்காடும் தமிழக பாஜக தலைவர்!
Next articleபெண்களே உஷார் அழகு கிரீமால் வந்த ஆபத்து!  3 பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி தரும் பாதிப்பு