மீண்டும் இணையப்போகும் மூன்று துருவங்கள்.. எடப்பாடி போட்ட கறார்!! ஆட்சி அமைக்க இது தான் வழி!!
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நேற்று கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படி எதிர்கொள்வது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த நிலையில் தொடர்ந்து எந்த ஒரு தேர்தலிலும் வெற்றிக்கான முடியவில்லை.
இதனை மாற்றும் விதமாகத்தான் எடப்பாடி அவர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரையை விவகாரம் என தொடங்கி ஆம்ஸ்ட்ராங் படுகொலை வரை பலவற்றிலும் தனது செயல்பாட்டின் மூலம் வேகத்தை அதிகரித்துள்ளார். தற்பொழுது மீண்டும் ஆட்சியை எப்படி கைப்பற்ற வேண்டும் என்பது குறித்தெல்லாம் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இதில் சிவி சண்முகம் , வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேற்கொண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகளை மீண்டும் இணைக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு முற்றிலும் தடை போட்டு விட்டாராம். குறிப்பாக ஓ பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்கள் ஒருபோதும் கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.
முன்னதாகவே பல மேடைகளிலும் பேட்டிகளிலும் இவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறிய நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலும் இதனையே தெரிவித்துள்ளாராம். இதற்கு மாறாக எப்படி ஆட்சியை அமைக்க வழி செய்ய வேண்டும் என்று திட்டங்களை வகுக்கும்படி அறிவுறுத்தியுள்ளாராம்.