மீண்டும் இணையும் தளபதி யுவன் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

0
154

மீண்டும் இணையும் தளபதி யுவன் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

தளபதி இப்போது நடித்துக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தளபதியின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தமன் இந்த படத்துக்கு இசை அமைக்கிறார்.

தளபதி 66 படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானதில் இருந்து அடுத்தடுத்த அப்டேட் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தளபதியுடன் யுவன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வைரலான இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தளபதிக்கு கதை சொன்ன இயக்குனர்களில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி ஒருவர். அவர் சொன்ன கதை தளபதிக்கு பிடித்ததாகவும் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்பட்டது.

அதற்கு யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைப்பாளராக தேசிங் பெரியசாமி தேர்வு செய்திருந்தார். இந்த நிலையில் தான் யுவன் பகிர்ந்த புகைப்படம் வைரல் ஆனது.

தளபதியின் அடுத்த படம் தளபதி 67 ஐ இயக்க போவது தேசிங் பெரியசாமி என்றும் அதற்கு யுவன் தான் இசையமைக்கிறார் என்று கிசு கிசுக்கப்படுகிறது. தளபதி அடுத்து அட்லீ யுடன் தான் இணைகிறார் என்று கடந்த வாரம் ஒரு செய்தி உலா வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

எது எப்படியோ தளபதி யார் படத்தில் நடித்தாலும் சந்தோஷம் என்ற ரீதியில் கொண்டாட தயாராக உள்ளனர் அவரது ரசிகர்கள்.