மீண்டும் முதலில் இருந்தா..? – சர்வதேச விமான சேவைக்கு ஏப்.30 வரை தடை..!

0
172

இந்தியாவில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்து வரும் சூழலில் சர்வதேச விமான பயணங்களுக்கான தடையை ஏப்ரல் 20ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2020ம் ஆண்டு முழுவதிலும் கொரோனா பாதிப்பு தலை தூக்கிய நிலையில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன், சர்வதேச அளவிலான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் செயலுக்கு கொண்டு வந்தன. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள், மூத்தக்குடிமக்கள் என படிப்படியாக கொரோன தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்தது. இதற்கிடையே வேறு சில நாடுகளுக்கும் லட்சக்கணக்கான தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், அதற்கு பேரிடியாய் தனது தாக்கத்தை அதிகரித்தது கொரோனா வைரஸ். வட மாநிலங்களிலும், தமிழகத்திலும் நாளுக்கு நாள் வைரஸ் தொற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியதால் மாநிலங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து சுற்றறிக்கை அனுப்பிய மத்திய அரசு, கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரபடுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது.

இந்த சூழலில், சர்வதேச வர்த்தக விமான சேவைக்கு தடை ஏப்ரல் 30ம் தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச வர்த்தக விமானங்கள் மீது ஏற்கெனவே பயணத் தடை அமலில் இருக்கிறது. இந்த தடையை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், ஏர் டிராவல் ஒப்பந்தங்களின் கீழ் இயக்கப்படும் சர்வதேச பயணிகள் விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

கொடிய வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் ஒரு கோடியே 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 40,715 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

Previous articleவாக்காள பெருமக்களே! உங்களுடைய வசதிக்காக அரசு செய்திருக்கும் அசத்தல் ஏற்பாடு பற்றி தெரியுமா?
Next articleஅண்ணாத்தையை சந்தித்த அண்ணாச்சி! வைரலாகும் இரு துருவங்களின் திடீர் மீட்டிங்!