முக ஆயிலை உறிஞ்சி எடுக்கும் முல்தானி மெட்டி!! இனி எண்ணெய் பிசுபிசுப்பு பருக்களுக்கு நோ சொல்லுங்க!!

Photo of author

By Divya

முக ஆயிலை உறிஞ்சி எடுக்கும் முல்தானி மெட்டி!! இனி எண்ணெய் பிசுபிசுப்பு பருக்களுக்கு நோ சொல்லுங்க!!

Divya

வெயில் காலத்தில் முகத்தில் எண்ணெய் வழிவது வழக்கமான விஷயம்தான்.முகத்தில் அதிகளவு எண்ணெய் இருந்தால் பருக்கள் உருவாகிவிடும்.இது தவிர அழுக்குகள் படிந்து முகத்தின் பொலிவு குறைந்துவிடும்.எனவே முகத்தின் எண்ணெய் பிசுபிசுப்பை கட்டுப்படுத்த இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கை அழகு குறிப்பை பின்பற்றலாம்.

முல்தானி மெட்டி எண்ணெய் பிசுபிசுப்பை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.இதை முகத்தில் தடவினால் எண்ணெய் பசை நீங்கி நாள் முழுவதும் முகம் பொலிவாக இருக்கும்.

1)முல்தானி மெட்டி பொடி – ஒரு தேக்கரண்டி
2)ரோஸ் வாட்டர் – ஒன்றரை தேக்கரண்டி

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு முல்தானி மெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒன்றரை தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை நன்றாக கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஸ்க்ரப் செய்ய வேண்டும்.அதன் பிறகு 10 நிமிடங்கள் வரை முகத்தை உலரவிட்டு குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இப்படி செய்தால் முகத்தில் எண்ணெய் வடியாமல் இருக்கும்.முல்தானி மெட்டி எண்ணெய் பிசுபிசுப்பை உறிஞ்சி பருக்கள்,அழுக்குகள் படியாமல் பார்த்துக் கொள்கிறது.

1)முல்தானி மெட்டி பொடி – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
3)ரோஸ் வாட்டர் – இரண்டு தேக்கரண்டி

கிண்ணத்தில் முல்தானி மெட்டி மற்றும் மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும்.

இப்படி செய்தால் முகத்தில் எண்ணெய் உருவாவது கட்டுப்படும்.முகப்பரு,சுருக்கம்,போன்றவை ஏற்படாமல் இருக்கும்.முல்தானி மெட்டி பொடியுடன் சந்தனப் பொடி கலந்து தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்தால் முகத்திற்கு க்ளோ கிடைக்கும்.