இன்று இளம் வயதினருக்கு முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.தினமும் கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்தி தலை குளிக்கும் பழக்கமே முடி உதிர்தல்,இளநரை உள்ளிட்டவை ஏற்பட காரணமாக இருக்கின்றது.
இளம் வயதில் முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்தல் 30 வயதிலேயே வழுக்கை ஏற்பட்டுவிடும்.இந்த முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யவும்.
தேவையான பொருட்கள்:
1)சின்ன வெங்காயம் – ஐந்து
2)அரிசி – 1 கப்
3)சோம்பு எண்ணெய் – 2 தேக்கரண்டி
4)கற்றாழை ஜெல் – 2 தேக்கரண்டி
செய்முறை:
படி 01:
முதலில் ஒரு கப் அளவு அரிசியை பாத்திரம் ஒன்றில் கொட்டி தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
படி 02:
அதன் பிறகு தங்களுக்கு தேவையான அளவு சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்ளவும்.அலர்ஜி இருப்பவர்கள் ஐந்து சின்ன வெங்காயத்தை மட்டும் எடுத்து தோல் நீக்கி இடித்து தனியாக சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
படி 03:
பிறகு ஒரு கற்றாழை மடல் எடுத்து தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று முதல் நான்கு முறை தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
படி 04:
இப்பொழுது அரிசி ஊறவைத்த நீரை ஒரு கிண்ணத்திற்கு தனியாக வடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் வெங்காயச் சாறு,கற்றாழை பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
படி 05:
பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி பெருஞ்சீரக எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.இதை தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி 45 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.பிறகு குளிர்ந்த நீரில் தலை முடியை அலசி சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வு நின்று அடர்த்தியான முடி வளர்ச்சி ஏற்படும்.