முதலமைச்சரின் புதிய திட்டம்!! இனிமே வீட்டுக்கே வரும் ரேசன் பொருட்கள்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

Photo of author

By CineDesk

முதலமைச்சரின் புதிய திட்டம்!! இனிமே வீட்டுக்கே வரும் ரேசன் பொருட்கள்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை  விதித்துள்ளது அரசு. இதன்படி அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகின்றனர். கல்யாணங்களில் அதிகபட்சம் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் கோவிலில் நடக்கும் கல்யாணங்களில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இதே போல் பேருந்து, திரையரங்கம். போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எல்லா பொது இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டலும் சராசரி மக்கள் பெரும்பாலும்  கூடும் இடம் நியாய விலை கடையில் தான். இங்கும் எல்லா இடங்களில் போலவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டலும் மக்களின் நேரமும் அன்றைய தினக் கூலியும் வீணாகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களை தொற்றிலிருந்து பாதுகாக்க, நேரடியாக ரேஷன் பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று விநியோகம் செய்யா திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 32 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளது. இதன் மூலம் சும்மர் 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.

அரசின் இந்த திட்டத்தினால் மக்கள் அதிகம் கூடி கூட்ட நெரசலில் சிக்கும் நிகழ்வு தவிர்க்கப்படும். மேலும் தொற்று பரவலும் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.