முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவில்களில் தரிசனம் செய்ய எளிய முறை! !தமிழக அரசின்  அதிரடி உத்தரவு!!

0
264

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவில்களில் தரிசனம் செய்ய எளிய முறை! !தமிழக அரசின்  அதிரடி உத்தரவு!!

சிறப்பு வாய்ந்த கோவிலில் 1000 கணக்கானோர் சாமி தரிசனம்செய்கின்றனர்.இந்த கோவில்களில்  அனைத்து இடமும் பசுமையும், அமைதியும்,செழிப்புடனும் காணப்படும்.மேலும் சில வசதிகள் இந்த கோவிலில் ஏற்படுத்த சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நடவடிக்கை மேற்கொண்டார்.  முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு எளிமையான முறையில் சாமி தரிசனம் செய்ய சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டது.இதை அடுத்து தமிழக அரசுவெளியிட்ட உத்தரவில்,48 முதுநிலை திருகோவில்களிலும் முதியவர்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு  எளிமையான முறையில்  தரிசனம் செய்ய அவர்களுக்கு மரத்திலான சாய்வுதளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் செய்யப்படும் என்றுசட்ட மன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட  அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் திருகோவில்களுக்கு வரும் முதியர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறநாளிகளுக்கு ம் எளிதில் சாமி தரிசனம் செய்ய முதியவர்களுக்கு மரத்தலான  சாய்வு தளங்களும்,மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியும்அமைத்திட நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும் தேவையான மாற்றுதிறனாளிகளின் பயன்பாட்டிற்காக இருசக்கர நாற்காலிகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க கோவில் செயல் அலுவலர்களுக்கு கேட்டுகொள்ளப்படுகிறது.

அதற்கான மேலும் சில நடவடிக்கைகள் பின்வருமாறு கூறியுள்ளனர்.முதியோர்கள்,மாற்றுதிறனாளிகளுக்கு எளிதில் புரியும் வகையில்  அவர்களுக்கு ஏற்படுத்திய வசதிகள் அமைப்பினை அமைத்திடவேண்டும்.இவர்களுக்கு குறைந்தபட்சம் 5 சக்கரநாற்காலிகள் திருகோவினுள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இக்கோவிலில் இச்செயல்களை கண்காணிக்க ஒருவரை பொறுப்பில் அமைத்திட வேண்டும்.இவ்வகைசெய்வதன்மூலம் அவர்கள் எளிமையான முறையில் சாமி தரிசனம் செய்து செல்வர்கள்.

Previous articleபெண்களை கீழ்மட்டமாக நடத்தினால் இது தான் தண்டனை! கூகுள் நிறுவனத்தில் வேலை செய்த பெண்களுக்கு ரூ.920 கோடியா!
Next articleசுறா பட நடிகர் கார் மீது திடீர் கல்வீச்சு! அட்சத்தில் பகுதி மக்கள்!!