மூன்றாவது போட்டியிலும் அணியில் இடமில்லை!! காயத்தால் அவதி படும் நியூசிலாந்து வீரர்!!

Photo of author

By Vijay

cricket: இந்தியா-நியூசிலாந்து தொடரில் விளையாடுவார் என எதிர் பார்த்த கேன் வில்லியம்சன் மூன்றாவது போட்டியிலும் பங்கேற்க மாட்டார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இரண்டாவது போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்திய அணியின் மிகவும் மோசமான பேட்டிங் காரணத்தால் மோசமான தோல்வியை தழுவியது.

நியூசிலாந்து அணியின் முக்கிய வீரரான கேன் வில்லியம்சன் காயம் காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதன் பிறகு இந்தியா-நியூசிலாந்து தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் இவர் பங்கேற்கவில்லை.

 

A New Zealand player suffering from an injury
A New Zealand player suffering from an injury

இந்த தொடரின் மூன்றாவது போட்டியானது மும்பையில் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் ‘அவர் இடுப்பு காயம்  மறுவாழ்வை தொடர எச்சரிக்கை அணுகுமுறை காரணமாக அவர் வெளியே வைக்கப்பட்டுள்ளார் ‘ போட்டிகளில் விளையாட தயாராக இல்லை என  நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறினார்