மோடிக்கு அறிவுரை கூறிய முதல்வர்! என்ன கூறினார் தெரியுமா?    

Photo of author

By Rupa

மோடிக்கு அறிவுரை கூறிய முதல்வர்! என்ன கூறினார் தெரியுமா?

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை காவு வாங்கி வருகிறது,சென்ற ஆண்டை விட தற்போது கொரோனாவின் 2வது அலையானது அசுர வேகத்தில் பரவி வருகிறது.குறிப்பாக இந்தியாவை பெருமளவு பாதித்துள்ளது.தினம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.இந்நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகிறது.

அதனைத்தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி போன்றவற்றை இறக்குமதி செய்து வருகிறது.அந்தவகையில் மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசியை அவரவர்,வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது.இந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி,ஆக்சிஜன் என்று இறக்குமதி செய்து வருகின்றனர்.

இதனிடையே பஞ்சாப் முதல்வர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பது,இந்த கொரோனாவின் 2வது அலையில் பாதித்த மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.அதுமட்டுமின்றி 18 வயது மேற்பட்டோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு பல நடவடிக்கைகளை மக்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் நிலையில்,மத்திய அரசும் மாநில அரசுகளுடன் கூட்டு முயற்சியாக செயல்பட வேண்டும்.

அதாவது கொரோனா தடுப்பூசி போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு ஒற்றை ஏஜென்சியாக செயல்பட்டு,தடுப்பூசி போடப்படும் அனைத்து வழிகளையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்வது உள்ளிட்ட செயல்களில் மத்திய அரசு கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது என்பதை இந்த கடிதம் உரைப்பது போல உள்ளது.இதேபோல டெல்லி முதல்வரும் மத்திய அரசின் மீது குற்றம்சாட்டி வந்தார்.தங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும்(தடுப்பூசி,ஆக்சிஜன்)போன்றவை இதர மாநிலங்களுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது என கூறியது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி எதிர் கட்சியினரும் மத்திய அரசு தங்களுது பணிகளை சரிவர செய்யவில்லை என குற்றம்சாட்டி வருகிறது.