யாருக்கெல்லாம் கனா காணும் காலங்கள் சீரியல் புடிக்கும்!! அப்ப இந்த நியூஸ் உங்களுக்கு தான்!!

Photo of author

By CineDesk

யாருக்கெல்லாம் கனா காணும் காலங்கள் சீரியல் புடிக்கும்!! அப்ப இந்த நியூஸ் உங்களுக்கு தான்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலுக்கு ஒரு தனி மவுசு தான். விஜய் தொலைக்காட்சி ஆரம்பித்த சமயத்தில் மக்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் மற்றும் பல சுவாரசியமான சீரியல்களை ஒளிபரப்ப்பட்டது.  மேலும் அதிலும் குறிப்பாக  இளைஞர்களை கவரும் வகையில் பலம் சீரியல்கள் ஒளிபரப்பானது. கனா காணும் காலங்கள் 7C, ஆபீஸ் போன்ற பல இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் சீரியல்கள் ஒளிபரப்பானது. அதிலும் குறிப்பாக கனா காணும் காலங்கள் என்னும் ஒரு கல்லூரி கதையை ஒளிபரப்பியது. இந்த கதை எதிர்பாராத விதமாக ரசிகர்களை கவர்ந்து அதன் டிஆர்பி உயர்ந்தது.

அதிலிருந்து மாணவர்களை கவரும் நோக்கத்தில் விஜய் டிவி மற்ற சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை உருவாக்கியது. அதற்கு உதாரணமாக அண்மையில் பிரபலமாகியுள்ள குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை கூட சொல்லலாம். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பல வருடங்களாக சமைத்து சமையலில் ஜாம்பவானாக இருக்கும் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் ஜட்ஜஸ் ஆக உள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சியில் உலக அளவில் வைரலாகி வந்தது.

தற்போது எல்லோரும் எதிர்பாராத வகையில் அனைவருக்கும் பிடித்த கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்தவர்களை ரியூனியன் நிகழ்ச்சி நடத்தி மீண்டும் ஒன்று சேர்க்க விஜய் டிவி முடிவெடுத்துள்ளதாம். அந்த ரியூனியன் நிகழ்ச்சி அண்மையில் படமாக்கப்பட்டது மேலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய எந்த ஒரு தகவலும் வெளி வராத நிலையில், தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியில் நடித்தவர்களின் ரியூனியன் நிகழ்ச்சி படமாக்கப்பட்டது ஒளிபரப்பாக உள்ளதாம். இந்த நிகழ்ச்சி விஜய் ரசிகர்கள் மற்றும் கனா காணும் காலங்கள் சீரியல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் இந்த தகவல் இணையதளத்தில் வைரலாக வருகிறது.