ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற போர் தொழில் திரைப்படம்… அதிகாரப்பூர்வமாக ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற போர் தொழில் திரைப்படம்… அதிகாரப்பூர்வமாக ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

Sakthi

Updated on:

 

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற போர் தொழில் திரைப்படம்… அதிகாரப்பூர்வமாக ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…

 

கடந்த ஜூன் மாதம் வெளியாகி அனைவரின் வரவேற்பை பெற்ற போர் தொழில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, வேழம், மன்மத லீலை, சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், நித்தம் ஒரு வானம் போல பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

 

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் போர் தொழில் திரைப்படம் உருவானது. இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார், நடிகை நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

கடந்த ஜூன் மாதம் வெளியான போர் தொழில் திரைப்படம் இன்று 50வது நாளை எட்டியுள்ளது. மேலும் போர் தொழில் திரைப்படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக அளவில் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த வெற்றிகரமான நாளில் போர் தொழில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பே அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

 

அதன்படி நடிகர் அசோக் செல்வன், நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ஓடிடி ரசிகர்கள் அனைவரும் ஓடிடியில் போர் தொழில் திரைப்படத்தின் வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.