வசமாக சிக்கிய விஜய் சேதுபதியின் கதாநாயகி! பைவ் ஸ்டார் ஹோட்டலை சுற்றி வளைத்த போலீஸ்!
சமீபகாலமாக பல பிரபலங்களின் பிள்ளைகள் போதைப்பொருள் வழக்கில் அதிகமாக சிக்கி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்புதான் ஷாருக்கானின் மகன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். பல நடவடிக்கைகளுக்கு பிறகு அவரை வெளியே மீட்டனர். அந்த வகையில் தற்பொழுது ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. பல ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் போதைப்பொருள் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் தனியார் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் அடிக்கடி போதைப்பொருள் விருந்து என்று ஒன்று நடைபெற்று வந்துள்ளது. இந்த விருந்தில் கலந்துகொள்ள நாட்டமுடையவர்கள் அந்த விடுதியின் இமெயிலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
இவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் ஹோட்டலில் இருந்து பதில் அனுப்பப்படும். எந்த நேரத்தில் எந்த மேஜை உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் ஹோட்டல் அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு அந்த நபர் அந்த குறுஞ்செய்தியை காட்டி ஹோட்டலுக்குள் சென்று வந்துள்ளனர். இம்முறை அது நடைபெறும் தகவல் போலீசாருக்கு முன்கூட்டியே தெரிவித்துள்ளனர். இரவு ஒரு மணிவரை இந்த மது விருந்து நடைபெறுவதாக கூறியுள்ளனர். பிறகு தனிப்படை போலீசார் அந்த நட்சத்திர விடுதிக்கு திடீரென்று ஆய்வு நடத்தினர். அவர் ஆய்வு நடத்தியதில் 148 பேரை விசாரணை நடத்தினார். இந்த போதை பொருள் விருந்தில் ஆந்திரா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாகா பாபுவின் மகள் நிகாரிகா கலந்துகொண்டதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சௌத்ரி என் மகளும் இதில் கலந்து கொண்டுள்ளார்.
இவர்களோடு முன்னாள் டிஜிபி மகள் முன்னாள் எம்பியும் மகள் என பல பிரபலங்கள் சிக்கியுள்ளனர். நிகாரிகா விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி அவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்று முடிந்தது. இவ்வாறு இருக்கையில் இந்த போதைப்பொருள் விருந்தில் கலந்து கொண்ட சிக்கிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிவேதிதாவின் தந்தையும் ஓர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, என் மகன் அந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்தது உண்மைதான். ஆனால் எந்தவித தவறான செயலிலும் ஈடுபடவில்லை. என இவ்வாறு கூறியுள்ளார்.