வடசென்னை படத்தில் கஷ்டப்பட்ட அமீர்!

Photo of author

By Kowsalya

வடசென்னை படம் 2018 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் அமீர் ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் நடித்த மிகவும் மாபெரும் வெற்றி பெற்ற படம். இந்த படத்தில் தனுஷ் ஒரு கேரம் வீரராக பங்கேற்று இருப்பார். அதேபோல வடசென்னை மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையை எடுத்துக் கூறிய படமாக எது கருதப்பட்டது.

 

இந்த படம் எடுக்கும் பொழுது அமீர் பல காட்சிகளில் கஷ்டப்பட்டு இருக்கிறார் என்ற உண்மை நமக்குத் தெரிய வந்துள்ளது.

 

அந்த படத்தில் அமீர் மற்றும் ஆண்ட்ரியா அவர்களின் ஒரு பகுதியான காட்சிகள் இருக்கும். அந்த காட்சியில் அமீர் ஆண்ட்ரியாவை காதல் செய்வார் காதல் செய்து அவரது திருமணம் செய்து கொள்ள அவர் வீட்டில் போய் கேட்கும் பொழுது அவர்கள் மறுப்பார்கள். ஆனால் அமீரை காதலித்து திருமணம் செய்து கொள்வார் அண்ட்ரியா.

 

அந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க அமீர் மிகவும் கஷ்டப்பட்டாராம்.

 

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா அவர்களிடம் வட சென்னை குறித்த வட சென்னை 2 வருவது குறித்த பேசப்பட்டது. அப்பொழுது வடசென்னை 1

உங்களுடைய கதாபாத்திரங்களில் அமீருடன் நடிப்பது பற்றிய விளக்கங்கள் கேட்கப்பட்டது அதில் அவர் கூறிய பதில், அமீர் மிகவும் ரொமான்ஸ் காட்சிகளில் கஷ்டப்பட்டார் என்ற செய்தியை அவர் சொன்னார். ரொமான்ஸ் வராது என்றபடி சொல்லி உள்ளார்.

 

இப்பொழுது வெற்றி மாறன் அவர்கள் வடசென்னை 2 வரப்போகிறது என்ற தகவலையும் சொல்லி உள்ளார்

அதனுடைய வருகைக்காக மக்களுக்கு மிகவும் அந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.