வாக்காளர் அடையாள அட்டையுடன் கட்டாயம் இதனை இணைக்க வேண்டும்! மத்திய அரசின் வலியுறுத்தல்!
வாக்காளர் பட்டியலுடன் புதியதாக ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவர்கள் ஓராண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி ஆண்டுக்கு நான்கு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கபடலாம் என்று கூறினார் .தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்வதற்கா தேர்தல் திருத்தச் சட்டம் 2021 கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை நிறைவேற்றப்பட்டது. அடிப்படை நடைமுறையில் தேர்தல் முக்கிய நடைமுறைகளை இணைப்பதற்காக நான்கு அறிக்கைகளை ஒன்றிய சட்ட மன்ற அமைச்சர் கிரண் ரி ஜு ஜு வெளியிடுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது,வாக்காளர்கள் பல இடங்களில் தனது வாக்குகளை பதிவு செய்வது தடுக்கப்படுகிறது. இதன்மூலம் கள்ள ஓட்டுகளை போடப்படுவதையும் தடுக்கலாம். இராணுவம் மற்றும் அயல் நாட்டில் பணி செய்வோர்களளின் கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் வாக்களிப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு பாலின சமத்துவ தேர்தல் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றது. இவர்களை வாழ்க்கை துணை என்று பொது பாலினமாக மாற்றப்படும்.வயது நிரம்பிய இளைஞர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் ஆண்டுக்கு நான்கு முறை வழங்கப்பட உள்ளது.
ஜனவரி 1ம் தேதி படி 18 வயது நிரம்பியவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், ஜனவரி 1க்குப் பிறகு 18 வயதை எட்டும் இளைஞர்கள், ஓராண்டு காத்திருக்க வேண்டியுள்ளது. இனிமேல், ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 என்ற அடிப்படையில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க நான்கு முறை வாய்ப்புகள் வழங்கப்படும் என ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
தேர்தல் பணியில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள், தேர்தல் பணியாளர்களை தங்க வைப்பதற்கும், தேர்தல் சம்பந்தப்பட்ட பொருட்களை வைப்பதற்கும் தங்களுக்கு தேவைப்படும் எந்த ஒரு இடத்தையும் தேர்தல் ஆணையம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.அரசு வெளியிட்ட அறிக்கையின்படி புதியதாக விண்ணபிப்பவர்கள் ஒரு ஆண்டுக்கு நான்கு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம்!