வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரவில் நடந்த குளறுபடி! தானாக இயங்கிய கணினி மற்றும் ஏ.சி!

Photo of author

By Rupa

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரவில் நடந்த குளறுபடி! தானாக இயங்கிய கணினி மற்றும் ஏ.சி!

சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாட்டில் நடந்து முடிந்தது.இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இந்த தேர்தலானது வித்தியாசமானது.ஏனென்றால் இரு பெரிய கட்சிகளின் தலைவர்கள் இன்றி அவர் பிரதிநிதியாக நின்று போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் பல குளறுபடியகள் நடந்த வண்ணம் தான் இருந்தது.இந்த தேர்தலில் யார் கோட்டையை கைப்பற்ற போகிறர்கள் என கேள்வியாகவே உள்ளது.

அந்தவகையில் பல பண பரிமாற்றங்களும் நடந்தது.தேர்தல் முடிந்ததும் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார்.இன்னும் நமது தேர்தல் பணிகள் முடியவில்லை,இனிதான் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் செயல்பட வேண்டும் என கூறினார்.இரவும் பகலும் வாக்கு உள்ள மையத்தை கண்காணிக்க வேண்டும் என்றார்.பெட்டிகள் கைமாறும் நிலை அதிக வாய்ப்புகள் உள்ளது என்றார்.

அவர் கூறியது போல கோவையில் வாக்குப்பெட்டிகள் உள்ள மையத்திற்கு முன் திடீரென்று நவீன கண்டைனர் லாரிகள் வந்து நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த பிரச்சனை நடந்து ஆறாத நிலையில் கரூர் மாவட்டத்தில் வாக்கு பதிவு பெட்டிகள் உள்ள அறைக்கு பக்கத்தில் இரவு தானாக கணினிகள் மற்றும் ஏசி இயங்கியுள்ளது.இது எவ்வாறு நடந்திருக்க கூடும் என திமுக வினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரே மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாசாங் சாய் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.