வாத்தி ரைடு மேற்கொண்ட முதல்வர்! தமிழகத்தின் அடுத்த அதிரடி இதுதான்!
திமுக பத்தாண்டுகள் கழித்து தற்பொழுது தான் ஆட்சி அமர்த்தியுள்ளது.அதனால் மக்களின் தேவைகளை கேட்டறிந்து ஒன்றொன்றாக நிறைவேற்றி வருகிறது.அதுமட்டுமின்றி பிரச்சாரத்தின் போது மக்களுக்கு செய்வதாக 505 வாக்குறுதிகளை திமுக அளித்தது.தற்பொழுது அதில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளது.அதுமட்டுமின்றி மக்களுக்கு பயன் தரும் வகையில் பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளனர்.மக்களை தேடி மருத்துவம்,மாணவர்களை தேடி கல்வி போன்றவை மக்கள் பார்வையில் புதிதாக பார்க்கப்படுகிறது.அதுமட்டுமின்றி பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் போன்றவற்றையும் அமல்படுத்தினார் என்பது குறிபிடத்தக்கது.அந்தவகையில் திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வரான ஸ்டாலின் அவர்கள் அவ்வபோது பல துறைகளுக்கு சென்று சோதனை நடத்தி வருவார்.சமீபகாலமாக இதனை வழக்கமாகவே கொண்டுள்ளார்.
இதேபோல தான் நள்ளிரவில் ஓர் முறை மக்கள் குறைக்கேற்கும் துறைக்கு சென்று சோதனையிட்டார்.அது பெருமளவு வைரலானது.அந்தவகையில் தற்போது தலைமை செயலகத்தில் உள்ள தனிபிரிவிற்கு சென்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்குள்ள மக்களிடம் மனுக்களை கேட்டு வாங்கினார்.அவர்கள் கேட்கும் கோரிக்கை விரைவில் செயல்படுத்தி தருவதாகவும் கூறினார்.அப்போது அங்கிருந்த பெண்மணி ஒருவர் தன் மகன் காணவில்லை என்றும்,கண்டுபிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்தார்.
அதனை கேட்ட முதல்வர்,இவரது மகனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக கண்டுபிடிக்க வேண்டுமென்று ஆணையிட்டார்.அதுமட்டுமின்றி பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.மேலும் அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகிறதா என்பதயும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதுமட்டுமின்றி மனுதாரர்களுக்கு நாம் எந்த விதங்களில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்பது குறித்து அவர்களுக்கு அவ்வபோது தக்க பதிலை அளிக்க வேண்டுமென்று அங்குள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.