“வானத்தைப் போல” விஜயகாந்த் போன்று வாழ விரும்பினேன்!! கடைசியில் வீடு கூட இல்லாமல் இருந்தேன்!! நடிகர் விதார்த்

Photo of author

By Gayathri

எனக்கு வானத்தைப்போல படத்தில் உள்ள அண்ணன் விஜயகாந்தை போல வாழ வேண்டும் என ஆசை.

ஆனால் என் தம்பிகள் கட்டாயப்படுத்தியதனால் நான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். என் தம்பியின் உடைய நண்பன் மூலம் காயத்ரி என்னும் பெண்ணை முதலில் பெண் பார்த்தேன். இருவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் என் தாயார் இந்த பெண் வேண்டாம் என்று கூறி விட்டார். என்று தனக்கு நடந்ததை மனம் திறந்து கூறுகிறார் நடிகர் விதார்த்.

மேலும் அவர் கூறுகையில், மறுநாள் காலையில் எனது தாயார் வந்து என்னிடம் இந்த பெண்ணையே பேசி முடித்து விடுவோம் என்றும் கூறினார் என்று விதார்த் அவர்கள் கூறியுள்ளார். இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. அச்சமயத்தில் தான் குற்றமே தண்டனை படுத்தினை விதார்த் அவர்கள் முடித்தவைத்துள்ளார். இப்படத்தினை தியேட்டர்களுக்கு கொண்டு சேர்க்க மிகவும் கடின பட்டுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படம் தியேட்டர்களுக்கு சென்ற போதிலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.

அதன் பின்னர் தான் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து வீடு இன்றி கஷ்டப்பட்டுள்ளனர். மேலும் அந்நேரத்தில் நடிகர் விதார்த் அவர்களுக்கு ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் குரங்கு பொம்மை ஆகிய இரு படங்கள் வந்துள்ளன. இதில் ஒரு கிடாயின் கருணை மனு படம் 40 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. அப்பொழுது தனது மனைவியை நடிகர் விதார்த் அசிஸ்டன்ட் டைரக்டரின் வீட்டில் தங்க வைத்தேன் என்றும் கூறியுள்ளார்.