விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் கைது!

0
290

சட்டத்தின் அடிப்படையில் தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை கைது செய்திருக்கின்றோம் என மலேசிய பிரதமர் மகாதீர் விளக்கமளித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கவும் நிதி திரட்டவும் ஆதரித்த 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.இது மலேசியா தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கைது குறித்து பிரதமர் மகாதீர் கூறுகையில், இந்நடவடிக்கை முழுவதும் போலிஸாரால் சட்டப்படி தான் எடுக்கப்பட்டது.இதில் அரசு எந்த விதத்திலும் தலையிடவில்லை.எந்தவொரு தரப்பினரையும் பலவீனப்படுத்த வேண்டும் என்கிற நோக்கமில்லை என்று கூறினார்.

முன்னதாக, நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து தமிழ் அமைச்சர்கள் போலிஸாரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தனர்.

நீதிமன்றத்தில் உண்மை புலப்படும் என அமைச்சர் வேதமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

Previous articleகனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு! தமிழிசைக்கு கோர்ட் புதிய ஆணை
Next articleகுடியரசு மற்றும் விடுதலை நாளைக் கூட தெரியாத திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வன்னியர் வரலாறு தெரியுமா? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி