வியாபாரத்தில் நஷ்டமால் வைகை ஆற்றில் குதித்து வியாபாரி தற்கொலை!!

Photo of author

By Rupa

வியாபாரத்தில் நஷ்டமால் வைகை ஆற்றில் குதித்து வியாபாரி தற்கொலை!!

வைகை ஆற்று பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விளக்கத்தூண் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில்

மதுரை எல்.என்.பி. அக்ரஹரத்தை சேர்ந்தவர் மாதவன் மகன் முரளி 44. இவர் வியாபாரம் ஒன்று சுயேட்சையாக செய்து வந்துள்ளார் தான் செய்த வந்த வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டதால்
மன அழுத்தத்தில் இருந்தவர் மது போதை பழக்கத்தில் அடிமையாகி வைகை ஏவி பாலத்தில் அருகில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

காவல்துறையினர் முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைகாகு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முரளியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.