விவசாய பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் நீர் திறப்பு !
பருவமழை இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 93.7 அடியாகள்ளது.
மேட்டூர் அணையின் கால்வாய் பாசனம் திட்டமானது, 1955 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு சேலம், ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இதில் கிழக்குக்கரை வாய்க்கால் பாசன பகுதிகளில் 27,000 ஏக்கர் களும், மேற்குக்கரை வாய்க்கால் பாசனத்தில் பகுதியில் 18 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை உள்ள 137 நாட்களுக்கு 9.60 டிஎம்சி தண்ணீரை பாசனத்திற்காக திறந்து விடப்பட்டும் . ஆனால் நடப்பாண்டுகளில் நீர் வரத்து திருப்திகரமாக இல்லாத காரணத்தினால் 16 நாட்கள் தாமதமாக , கால்வாய் பாசனத்திற்கு இன்று திறக்கப்படுகிறது .இதுவரை கால்வாய் பாசனத்தில் தலைமை மதகுகள் மூலமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ள நிலையில் ,தற்போது பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.
மதகுகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி இருப்பண்ணன்,மின்துறை அமைச்சர் தங்கமணி,சமூக நல அமைச்சர் சரோஜா ஆகியோர் மின் விசையை இயக்கி மதகுகளை திறந்து வைத்தனர்.
முதலில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் விகிதம் நீரின் அளவு திறக்கப்பட்ட நிலையில், தேவைக்கு ஏற்ப ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்படும் என அமைச்சர்கள் கூறினர். இன்று முதல் டிசம்பர் 31 வரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதனையடுத்து, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.