வெளிநடப்பு செய்த திமுக!புதிய கல்விக் கொள்கை ஏற்க மறுப்பு!

0
127

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்  சில புதிய கல்விக் கொள்கை குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார். அக்கோரிக்கை  ஏற்கப்படாததால்  திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அக்கோரிக்கை பின்வரும் பின்வருமாறு “தேசிய கல்வி கொள்கை பற்றி ஆராய இரு குழுக்களை நியமித்துள்ளனர். அக்குகுழுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். தமிழும் ஆங்கிலமும் என்ற இரு மொழிக் கொள்கை தமிழகத்தின் உயிர்மூச்சாக உயிர்நாடியாக விலகிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் விவாதிக்க வேண்டும். சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றி தரவேண்டும்.சமத்துவம், தாய்மொழி, சமூகநீதி ஆகியவற்றை முன்நிறுத்தி ‘தேசிய கல்வி கொள்கை 2020’ முழுவதுமாக எதிர்க்க வேண்டும். ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

ஆனால் இதுகுறித்து அரசு முடிவெடுக்க மறுத்ததால் திமுக வெளிநடப்பு செய்தது.வெளிநடப்பு செய்த பிறகு ஸ்டாலின் பேசியதாவது,” நான் பேசியதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்தார்.அவரது விளக்கத்தை தீர்மானமாக நிறைவேற்ற கோரினோம்.ஆனால்அரசின் விளக்கத்தை விட தீர்மானம் தான் ஒட்டுமொத்த சட்டப்பேரவையில் எண்ணத்தை வெளிப்படுத்தும். எங்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே இதனை கண்டித்து திமுக திமுக சார்பில் வெளிநடப்பு செய்கிறோம்”

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

Previous articleஇனி இ-பாஸ் இல்லாமல் இந்த மலைப்பகுதிக்கு சுற்றுலா செல்லலாம்.. உதவி ஆட்சியர் அறிவிப்பு!!
Next articleஅரியர் ஆல் பாஸ் விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!