வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றவது ஒருநாள் போட்டி… அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி!!

0
321

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றவது ஒருநாள் போட்டி… அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி..

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

 

வெஸ்ட் இண்டீஸ் நாட்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் ஒருநாள் தொடர் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இந்திய அணி இரண்டு போடீடிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் தற்பொழுது ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

 

இந்திய அணி மோதிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட் நகரத்தில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சுப்மான் கில் மற்றும் இஷான் கிஷன் இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்து சுப்மான் கில் 85 ரன்களும் இஷான் கிஷன் 77 ரன்களும் சேர்த்தனர். பின்னர் களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடினார். சூரியக்குமார் யாதவ் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்து 70 ரன்கள் சேர்த்தார்.

 

இதனால் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் சேர்த்தது. மேற்கிந்திய தீவுகள் அணியில் பந்துவீச்சில் ரொமாரியோ சேப்பர்ட் இரண்டு விக்கெட்டுகளையும், ஒய் கரியா, அல்சாரி ஜோசப், மோட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

இதையடுத்து 352 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. ஒரு புறம் அலிக் அதனசே நிதானமாக விளையாடி ரன்கள் சேர்க்க மறுபுறம் விக்கெட்டுகள் மழை பெய்தது. 50 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்திய தீவகுள் அணி தள்ளாடியது. 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலிக் அதனசே அவர்களும் ஆட்டமிழந்தார்.

 

அதன்பிறகு களமிறங்கிய அல்சாரி ஜோசப் அவர்களும் குடகேஷ் மோட்டி அவர்களும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க தொடங்கினர். இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சினால் அல்சாரி ஜோசப் 26 ரன்களில் ஆட்டமிழக்க மேற்கிந்திய தீவுகள் அணா 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. குடகேஷ் மோட்டி 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசி ஷர்தல் தக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜெயதேவ் உனத்கட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

முதல் போட்டியிலும் வென்று மூன்றாவது போட்டியிலும் வென்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது சுப்மான் கில் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை இஷான் கிஷன் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணி மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்குகிறது.

 

Previous articleநடிகர் தனுஷ் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்களின் மகள்… வெளியான அறிவிப்பு!!
Next articleசுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி!! இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!!